

புது தில்லி: இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 39 பேரில் 38 இந்தியர்களின் உடல்கள் சிறப்பு விமானத்தில் இன்று அமிர்தசரஸ் கொண்டு வரப்பட்டது.
பாக்தாத்தில் இருந்து புறப்பட்ட இந்த சிறப்பு விமானம் இன்று பகல் 2.30 மணியளவில் அமிர்தசரஸில் தரையிறங்கியது. இராக்கில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை, அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர்.
இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களில், ஒருவரது உடல் அடையாளம் காணப்படாததால், 38 பேரின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்காக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வி.கே. சிங் நேற்று இராக் புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து 38 இந்தியர்களின் உடல்கள் இன்று சிறப்பு விமானத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டது.
பஞ்சாப், இமாச்சல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களின் உடல்களை, அவர்களது உறவினர்கள் அமிர்தசரஸ் ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இணை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவும் உடன் இருந்தார்.
பிறகு அந்த சிறப்பு விமானம் பாட்னா மற்றும் கொல்கத்தாவுக்குச் சென்று உறவினர்களிடம் இந்தியர்களின் உடல்களை ஒப்படைக்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.