புது தில்லி: சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ஃபி எடுக்கும் போது அதிகமான விபத்துகள் நடந்த பகுதிகள் எவை எவை என்று பட்டியல் தருமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
செல்ஃபி எடுக்கும் போது அதிகமான விபத்துகள் நேரிட்டதை அடுத்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், செல்ஃபி எடுக்கும் போது அதிக விபத்துகள் நேரிடும் பகுதியை 'நோ செல்ஃபி ஸோன்' (சுய படம் எடுக்கக் கூடாத பகுதிகள்) என்று அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், செல்ஃபி எடுக்கும் போது விபத்து நடக்கும் பகுதிகளில், அபாயப் பலகை அல்லது அறிவிப்புப் பலகைகளை வைக்குமாறும், பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


