தேர்தல் நடவடிக்கைகளில் காங்கிரஸ் அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா புகார் அளித்தார்.
பெங்களூரு வந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்தை வியாழக்கிழமை சந்தித்துஅவர் அளித்த புகார் மனு:
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. முதல்வர் சித்தராமையா அலுவலகத்திலிருந்தே தேர்தல் பணிக்கு தேவையான நிதி சேகரிக்கப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினருக்கு வழங்குவதற்கான பணமும், முதல்வர் அலுவலகத்திலிருந்தே கொண்டு செல்லப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, கடந்த 3 மாதங்களில் பணி மாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மைசூரில் தனக்கு ஆதரவான அதிகாரிகளை முதல்வர் சித்தராமையா பணியிட மாறுதல் செய்துள்ளார். அவர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








