தொழில் துறையில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வலியுறுத்தினார்.
தில்லியில் இந்திய தொழில்துறை, வர்த்தக கூட்டமைப்பின் (ஃபிக்கி) பெண்கள் அமைப்பு சார்பில், பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், எழுத்தாளரும், தொழில் முனைவோருமான டுவிங்கிள் கன்னா, தயாரிப்பாளர் ஏக்தா கபூர், விஞ்ஞானி டெஸி தாமஸ் ஆகியோருக்கு ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:
நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேர் பெண்கள் ஆவர். நமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வீட்டிலும், பணியிடங்களிலும் பல்வேறு வழிகளில் அவர்கள் பங்காற்றுகிறார்கள். எனினும், தொழில் துறையில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
எனவே, நமது சகோதரிகளும், மகள்களும் அதிக அளவில் தொழில் துறைக்கு வருவதற்கான உகந்த சூழலை நாம் உருவாக்கித் தர வேண்டும். வீட்டிலும், பணியிடங்களிலும், சமூகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டும்.
இதில், பெண்கள் பணிபுரியும் சூழலை உருவாக்குவதற்கும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் முக்கிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்கும்; நாட்டின் பொருளாதாரமும் அதிகரிக்கும்.
தொழில்முனைவோரை உருவாக்குவதற்காக, வளர்ச்சி இந்தியா (ஸ்டேண்ட் அப் இந்தியா) திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.
அந்த திட்டப்படி, இதுவரை 45,000 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில், 39,000 பேர் பெண்கள் ஆவர்.
ரூ.17.7 கோடி கடனுதவி: தொழில் முனைவோருக்கான 'முத்ரா' கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.17.7 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையில், பெண் தொழில் முனைவோருக்கு மட்டும் ரூ.8.8 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி அளிக்கப்பட்டதில், வாராக்கடன் விகிதம் 8 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
எனவே, தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளை ஃபிக்கி பெண்கள் அமைப்பு ஆராய வேண்டும்.
வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதை வேண்டுமென்றே செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 9,063-ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் செலுத்த வேண்டிய மொத்த தொகை, ரூ.1,10,050 கோடியாக உள்ளது. இதனால், நேர்மையாக வரி செலுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12 ஆண்டு தூய்மை இந்தியா திட்டம்... அனைவருக்கும் தரமான சுகாதார சேவை! பிரதமர் மோடி

ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?

கூப்பர் கானலி முதல் சதம்..! ஆறுதல் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



