சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நாடாளுமன்ற வளாகத்தில்  எதிர்க்கட்சிகள் இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அனுமதிக்காததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் 

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 9:43 am IST

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அனுமதிக்காததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் எதிர்க்கட்சிகள் இன்று மனிதச் சிங்கிலி போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா கூறினார்.

இதுகுறித்து புது தில்லியில் அவர் புதன்கிழமை கூறியதாவது: நாடாளுமன்றங்களின் இரு அவைகளும் அமளியால் முடங்கியுள்ளன. அவையில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், அவை முடங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என அரசு கூறுகிறது. உண்மையில் அரசுதான் பல்வேறு பிரச்னைகளை விவாதிக்க முன்வரவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரும் விவகாரம், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விவகாரம், வங்கிகளில் நடைபெற்ற மிகப் பெரும் ஊழல், தில்லி சீலிங் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வுப் பிரச்னை, சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு போன்ற பல்வேறு விஷயங்களை அவையில் விவாதிக்க அரசு தயாராக இல்லை.

அவையை முடங்கியிருக்கும் விஷயத்தில் எதிர்க்கட்சிகள் மீது பழிபோட அரசு முனைகிறது. ஆனால், அரசுதான் விவாதிக்க முன்வரவில்லை. இப்பிரச்னைகள் எல்லாம் மக்களின், நாட்டின் நலன் சார்ந்தவையாகும். இதனால், அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் மனிதச் சங்கிலி மற்றும் முழக்கமிடும் போராட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் வியாழக்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆர்ஜேடி, சிபிஎம், சிபிஐஎம், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் டி.ராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.