திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நீலகிரி எச்பிஎஃப் தொழிற்சாலையின் எஞ்சிய ஊழியர்களுக்கும் 'விஆர்எஸ்': மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

நீலகிரியில் உள்ள ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் நிறுவனத்தின் எஞ்சிய ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

Updated On :6 ஏப்ரல் 2018, 1:08 am IST

நீலகிரியில் உள்ள ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் நிறுவனத்தின் எஞ்சிய ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய கனரக தொழில் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ மாநிலங்களவையில் வியாழக்கிழமை அளித்த பதில் விவரம்:
ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 2013 ஏப்ரலில் இருந்து எச்பிஎஃப் நிறுவனத்தில் உற்பத்தி ஏதும் இல்லை.
இந்த நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்விடைந்துவிட்டன. இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தேசிய சம்பள விகிதத்தில் விருப்ப ஓய்வு அளிக்க சிசிஇஏ கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 30.06.2016 வரை 466 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. எனினும், 165 ஊழியர்கள் விஆர்எஸ்ஸுக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை அல்லது தகுதியான மனுக்களை அளிக்கவில்லை. இதனால், அவர்களுக்கு விஆர்எஸ் வழங்கப்படவில்லை. 
தற்போது நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி எஞ்சியுள்ள ஊழியர்களுக்கும் விஆர்எஸ் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. 
அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.