போபால்: மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலிலிருந்து 11 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் தலைமை தாங்கினார். அப்பொழுதுதான் மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலிலிருந்து 11 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ராவத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலிலிருந்து 11 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் வாக்களிக்காமலே இருப்பவர்கள், இடமாற்றம் செயப்பட்டவர்கள், இறந்து போனவர்கள் அல்லது இரட்டைப் பதிவு கொண்டவர்கள் ஆகியோராவார்கள்.
முன்னதாக ஜனவரி 15-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஆய்வில் 3,83,203 பெயர்கள் தகுதி அற்றவை என்று கண்டறியப்பட்டன. அதேபோல் பின்னர் மார்ச் 15 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரையில் நடத்தப்பட்ட சிறப்பு மறு ஆய்வில் 6,73,884 பெயர்கள் கண்டறியப்பட்டன.
தொடர்ந்து பெண்கள் அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைப் பதிவு செய்வதை உறுதி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


