நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

மேற்கு வங்கத்தைத் தாக்கிய சூறாவளி: 15 பேர் பலி; 50 பேர் காயம்

மேற்கு வங்க மாநிலத்தைத் தாக்கிய சூறாவளி காற்றில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 11:32 am IST


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தைத் தாக்கிய சூறாவளி காற்றில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கொல்கத்தாவில் 7 பேரும், ஹெரா மாவட்டத்தில் 6 பேரும், பங்குரா மற்றும் ஹுக்ளி மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.

சூறாவளியால் கட்டடம் இடிந்து விழுந்தது, மரம் சாய்ந்தது, மின்சாரம் தாக்கியது போன்ற பல சம்பவங்களில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் சூறாவளி காற்று மணிக்கு 98 கி.மீ. வேகத்தில் தாக்கியது. இதில் 200 மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. விமானங்களின் வரத்தும், புறப்பாடும் சில மணி நேரங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.