திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நீதிபதி லோயா மரண வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டப்பட்ட சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி பி.எச்.லோயா திடீரென மரணமடைந்தது குறித்த

Updated On :19 ஏப்ரல் 2018, 2:31 am IST

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டப்பட்ட சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி பி.எச்.லோயா திடீரென மரணமடைந்தது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்க இருக்கிறது.
நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி தன்னுடன் பணியாற்றுபவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீர் மாரடைப்பை ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அமித் ஷா தொடர்புடைய முக்கிய வழக்கை விசாரித்த நீதிபதி திடீரென மரணமடைந்தது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகம் எழுப்பப்பட்டது.
85 வயதாகும் லோயாவின் தந்தை இப்போதுவரை நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். மேலும் லோயாவுக்கு எந்த நோயும் கிடையாது. எனவே அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மும்பை வழக்குரைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் 16-ஆம் தேதி தனது தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வியாழக்கிழமை அறிவிக்க இருக்கிறது.
முன்னதாக, இந்த வழக்கில் நீதி விசாரணை தேவையில்லை என்று மகாராஷ்டிர மாநில அரசு வாதாடியது. ஒரு தனிநபரை (அமித் ஷா) குறிவைத்து, வேண்டும் என்றே நீதிபதி லோயா மரணத்தில் நீதி விசாரணை கோரி பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு தெரிவித்தது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து இந்த விவாகரம் தொடர்பாக மனு அளித்தனர். அதில், லோயாவின் திடீர் மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.