மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்: எடியூரப்பா உறுதி

கர்நாடக பாஜக முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 1:40 pm

கர்நாடக பாஜக முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 225 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பின்னர் மே 15-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், பாஜக முதல்வர் வேட்பாளரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா, ஷிமோகாவில் உள்ள ஷிகரிபூரா என்னும் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தவர் பேசியதவாது:

நான் எனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளேன். இம்முறை 30 முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன். ஏனெனில் அனைத்து சமுதாய மக்களின் ஆதரவும் பாஜக-வுக்கு உள்ளது. லிங்காயத்து மற்றும் விஷ்வேஷ்வரா ஆகியோரை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு லண்டனில் பிரதமர் நரேந்திர மோடி தக்க பதிலடி அளித்துள்ளார் என்றார்.

முன்னதாக, கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் லிங்காயத்து தனி மதமாக அறிவிக்கப்பட்டு அதை சிறுபான்மையினர் பகுதியில் இணைத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நடவடிக்கை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.