/

நிலுவை வழக்குகளால் சிக்கியிருக்கும் ரூ.3.2 லட்சம் கோடி வரிப்பணம்: கலங்கும் வரித்துறை

இந்திய வரித்துறைக்கு வந்து சேர வேண்டிய ரூ.3.2 லட்சம் கோடி வரிப்பணம் நிலுவை வழக்குகளால் சிக்கியுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2018, 12:11 pm


புது தில்லி: இந்திய வரித்துறைக்கு வந்து சேர வேண்டிய ரூ.3.2 லட்சம் கோடி வரிப்பணம் நிலுவை வழக்குகளால் சிக்கியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளால், வரித்துறைக்கு வந்து சேர வேண்டிய பணம் வராமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி வரி வருவாய் தொடர்பாக சுமார் 2.40 லட்சம் வழக்குகளும், மறைமுக மற்றும் கால தாமதமான வரிகள் தொடர்பாக சுமார் 1.18 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதில் மிகக் குறைந்த தொகை மட்டுமே இதுவரை வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் வரித்துறை கூறுகிறது.

இதில், 33 ஆயிரத்துக்கும் மேலான வழக்குகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலும், நான்காயிரம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.