மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் 34% இடங்களில் மம்தா கட்சியினர் போட்டியின்றித் தேர்வு

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் 34 சதவீத இடங்களில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர். சம்பந்தப்பட்ட இடங்களில்
Updated on
1 min read

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் 34 சதவீத இடங்களில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர். சம்பந்தப்பட்ட இடங்களில் வேறு எவரும் போட்டியிடாததால் மம்தா கட்சியினரின் வெற்றி வாய்ப்பு ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டு இதேபோன்ற நிலை ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 11 சதவீத இடங்களில் போட்டியின்றி தேர்வாகினர். தற்போது அதை திரிணமூல் காங்கிரஸ் முறியடித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மே 14-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 
ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் மே 17-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் கடந்த சனிக்கிழமையுடன் (ஏப்.28) நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத் தகவல்கள்படி, பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தவிர வேறு எவரும் போட்டியிடவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 58,692 உள்ளாட்சி இடங்களில் 20,076 இடங்களில் திரிணமூல் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 
இது மொத்த இடங்களில் 34 சதவீதமாகும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com