வழி தவறி எல்லை தாண்டியவரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்

கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வழி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த நபரை அந்நாட்டு ராணுவம், இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
Updated on
1 min read

கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வழி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த நபரை அந்நாட்டு ராணுவம், இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பகுதியில் வசித்து வந்தவர் தல்வார் சிங் (23). இவர் கடந்த 2017 மார்ச் மாதம் தவறுதலாக பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் சென்றுவிட்டார். அங்குள்ள பல்லான்வாலா கிராமத்தில் வழி தெரியாமல் தவித்த அவரை, பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், அவர் தவறுதலாகவே எல்லைக்குள் நுழைந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு, வாகா எல்லைப் பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் தல்வார் சிங்கை பாகிஸ்தான் தரப்பு ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தது.
எனினும், பாகிஸ்தானில் அவர் எத்தனை நாள்கள் ராணுவப் பாதுகாப்பில் வைக்கப்பட்டார். பாகிஸ்தானில் எந்த சிறையில் அவர் அடைக்கப்பட்டார் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
வழி தவறி எல்லைக்குள் புகுந்து விடுபவர்களை விரைவில் திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே எவ்வித உடன்பாடும், நடைமுறைகளும்இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com