ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்

எத்தனைதான் விதிமுறைகள் இருந்தாலும், அபராதம் விதித்தாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் ஏராளம்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 10:52 am

DIN


எத்தனைதான் விதிமுறைகள் இருந்தாலும், அபராதம் விதித்தாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் ஏராளம்.

அப்படியே சிலர் ஹெல்மெட் வாங்கினாலும், தங்களது தலைகளுக்குப் போடாமல் வாகனத்தின் ஹேண்ட்பார்களுக்குப் போட்டிருப்பார்கள்.

உயிருக்கு பயந்து அல்லாமல், டிராபிக் போலீஸுக்குப் பயந்து ஹெல்மெட் போடுவோரும் உண்டு.

மேற்சொன்னவர்களில் எந்த வகையிலும் இல்லாமல், ஹைதராபாத் இளைஞர் ஹெல்மெட் அணியாமல், தனது வாகனத்தின் மட்கார்டில் இப்படி எழுதியும் உள்ளார்.

அதாவது, 'ஹெல்மெட் அணியவில்லை. நானும் மற்ற மனிதரைப் போல மரணிப்பேன்' என்று பதிவு செய்திருந்தார்.

இதனை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்ட ஹைதராபாத் போக்குவரத்துக் காவல்துறையினர், சரியான கமெண்டையும் போட்டுள்ளனர். அதில், எங்களை மன்னித்துவிடுங்கள் கிருஷ்ணா ரெட்டி சார். உங்களை நாங்கள் சாக விடமாட்டோம். மற்ற சக மனிதர்களைப் போல நீங்கள் வாழ்வதை பார்ப்போம். தயவுகூர்ந்து ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்குங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.

அது மட்டுமல்ல, இந்த வாகன ஓட்டுநரின் வரலாறையும் போக்குவரத்துக் காவலர்கள் புரட்டியுள்ளனர். அதில், இவர் மீது அபராதம் கட்டுவதற்கான 10 செல்லான்கள் நிலுவையில் உள்ளதும், இதில் 7 செல்லான்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காகவும் பதிவாகியுள்ளது. 

விதிகளை மீறுவோருக்கு இப்படி நகைச்சுவையாக அறிவுரைக் கூற விரும்புகிறோம். மக்களும், போக்குவரத்துக் காவல்துறையினர் தோழமையுடன் கூறும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.