பிகார் மாநிலம் முசாஃபர்நகரில் சிறார் காப்பகத்தில் ஏராளமான சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிகார் அரசும், மத்திய அரசும் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கியக் குற்றவாளி பிரஜேஷ் தாக்குர் நிர்வகித்து வந்த காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதும், அவர் நிர்வகித்து வந்த மற்றொரு காப்பகத்தில் 11 சிறுமிகள் காணாமல் போனதாக வந்த தகவலும் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், கைதான முக்கியக் குற்றவாளி பிரஜேஷ் தாக்குர், போலீஸ் காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சிரித்தபடி சென்ற புகைப்படங்கள் சமூக தளங்களில் வேகமாகப் பரவியது. இது மக்களுக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த சூழ்நிலையில்தான், பிகார் சம்பவத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேஜரிவாலின் 'பி-டீம்' சிஜேபி - சுவாதி மலிவால் குற்றச்சாட்டு!

சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



