பாஜக ஆளும் மாநிலங்களில் காட்டாட்சி நடப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிகார் காப்பகத்தில் நடந்திருப்பதை போல, உத்தரப் பிரதேச மாநிலத்திலும் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதிலிருந்து பாஜக ஆளும் மாநிலங்களில் முழு அராஜகம் நடப்பது உறுதியாகியுள்ளது.
பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் நடந்துள்ள சம்பவங்களிலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த குற்றங்களை மூடிமறைக்கும் செயலில் ஈடுபடக் கூடாது. பாஜக ஆளும் மாநிலங்களில் முழு காட்டாட்சி நடக்கிறது. அந்த மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு நிலை, பெண்களின் பாதுகாப்பு, மரியாதை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
பிகாரில் நடந்த அந்த துரதிருஷ்டவசமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், அதிலிருந்து உத்தரப் பிரதேச அரசு படிப்பினை பெற்றிருக்க வேண்டும். உடனடியாக உஷாராகியிருக்க வேண்டும். ஆனால், அதுபோல் செய்யாமல், உத்தரப் பிரதேச முடங்கியிருந்தது என்று அந்த அறிக்கையில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
பிகார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள காப்பகத்தில் இருக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், தியோரியாவிலும் அதேபோல் சம்பவம் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்: சோனம் வாங்சுக் மனைவி பேச்சு

மேக்கேதாட்டு அணை: மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சோழர்களின் வெற்றிக்கு வித்திட்ட வடபத்ர காளியம்மன்! | திருக்கோயில் வலம்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 7% சரிவு!
விடியோக்கள்



