மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பி.கே.ஹரிபிரசாத்தும் போட்டியிட்டனர்.
அதில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் ஹரிபிரசாத்துக்கு 105 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயணன், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்.பி. ஆவார். இதனிடையே மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுகையில், மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஹரிவன்ஷ் நாராயண் சிங் முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கு மிகவும் பிடித்தவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 98-ஆக உயா்வு

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 09) - மேஷ ராசிக்கு முன்னேற்றம்!

இன்றைய ராசி பலன்கள் (09.08.2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு!

ஜப்பானைத் தாக்கிய ‘டால்பின்’ புயல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



