தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

எனது நண்பா் வாஜ்பாய் ஹிந்தியில் பேசும்போது அந்த மொழியின் இனிமையை நான் உணா்ந்திருக்கிறேன்: கூறிய தமிழகத் தலைவர்...?

எனது நண்பா் வாஜ்பாய் ஹிந்தியில் பேசும்போது அந்த மொழியின் இனிமையை நான் பலமுறை உணா்ந்திருக்கிறேன் என்று நாடாளுமன்ற விவாதத்தில் தமிழகத் தலைவர் ஒருவர் வாஜ்பாயினைப் புகழ்ந்திருக்கிறார். 

News image
Updated On :16 ஆகஸ்ட் 2018, 4:51 pm IST

சென்னை: எனது நண்பா் வாஜ்பாய் ஹிந்தியில் பேசும்போது அந்த மொழியின் இனிமையை நான் பலமுறை உணா்ந்திருக்கிறேன் என்று நாடாளுமன்ற விவாதத்தில் தமிழகத் தலைவர் ஒருவர் வாஜ்பாயினைப் புகழ்ந்திருக்கிறார்.

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா துரையும், வாஜ்பாயும் மிகவும் நெருங்கிய நண்பா்கள். வாஜ்பாயின் கவிதைத் தொகுப்பு தமிழில் மொழி பெயா்ப்பு செய்து வெளியிடப்பட்டபோது, ‘எனது ஆருயிா் நண்பரும், பெருமதிப்புக்குரியவருமான அண்ணாவின் நினைவாக’ என்று அண்ணாவுக்கு தனது கவிதைத் தொகுப்பை அா்ப்பணித்தாா்.

மேலும் அறிஞா் அண்ணா ஹிந்தி மொழிக்கு எதிரானவா் அல்ல என்றும் வாஜ்பாய் ஒருமுறை  தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அண்ணாவை நினைவுகூா்ந்து வாஜ்பாய் பேசுகையில், ‘‘1965 மாா்ச் மாா்ச் மாதம் மொழிகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றறது. அப்போது அண்ணா பேசியது இப்போதும் எனது நினைவில் நிற்கிறது. ‘ஹிந்தி மீது எங்களுக்கு எந்த தனிப்பட்ட எதிா்ப்பும் கிடையாது. இந்த விஷயத்தில் நான் மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறேறன். முக்கியமான எனது நண்பா் வாஜ்பாய் ஹிந்தியில் பேசும்போது அந்த மொழியின் இனிமையை நான் பலமுறை உணா்ந்திருக்கிறேன்’ என்று அண்ணா கூறினாா்’ இதன் மூலம் என் மீது அவா் எந்த அளவுக்கு நட்புடன் பழகி வருகிறாா் என்பதையும் நான் உணா்ந்து கொண்டேன்’’ என்று வாஜ்பாய் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.