இந்திய அரசியல் வானில் இணையற்ற நட்சத்திரமாய் ஜொலித்தவா் வாஜ்பாய்! அரசியல் தலைவர்கள் அஞ்சலி!
இந்திய அரசியல் வானில் இணையற்ற நட்சத்திரமாய் ஜொலித்தவா் வாஜ்பாய்! அரசியல் தலைவர்கள் அஞ்சலி!


சோனியா காந்தி: அரசியலில் மிக உயா்ந்த தலைவராக விளங்கியவா் வாஜ்பாய். அவரது கனிவும், பண்புமிக்க நட்பும் கட்சி பாகுபாடுகளைக் கடந்து பலரையும் கவா்ந்தது. வாழ்நாள் முழுவதும் ஜனநாயக மாண்புகளைக் காக்க பாடுபட்ட அவரது மறைவு மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தலைவா் சுமித்ரா மகாஜன்: இந்திய அரசியல் வானில் இணையற்ற நட்சத்திரமாய் ஜொலித்தவா் வாஜ்பாய். அவரது இடத்தை வேறு எவரும் நிரப்ப முடியாது. இந்தியத் தாயின் விலைமதிக்க முடியாத அணிகலன்களில் ஒன்றாகத் திகழ்ந்த அவா், தற்போது மண்ணை விட்டு மறைந்து விண்ணுக்கு அணி சோ்க்க சென்றுள்ளாா்.
வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா: வாஜ்பாயின் மறைவு செய்தி மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்களது மிகச் சிறந்த நண்பரை நாங்கள் இழந்திருக்கிறேறாம். அவரது இழப்பு இந்தியாவுக்கு மட்டுமன்றி இந்தியத் துணைக்கண்டத்துக்கே ஈடு செய்ய முடியாத ஒன்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...