ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று இந்தியா வருகை

சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் ஃபெங்கே, 4 நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வருகிறார். 

Updated On :21 ஆகஸ்ட் 2018, 1:20 am IST

சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் ஃபெங்கே, 4 நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வருகிறார். 
கடந்த ஆண்டு டோக்கா லாம் விவகாரத்தில் இரு தரப்பு ராணுவம் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டு, பின்னர் சுமுகம் அடைந்த நிலையில், சீன பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வருவது இது முதல்முறையாகும்.
இந்தப் பயணத்தின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த ஆண்டில் நிர்மலா- வெய் ஃபெங்கே சந்திப்பது இது 2-ஆவது முறையாகும். 
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்புக்காக, பெய்ஜிங் சென்றிருந்த நிர்மலா சீதாராமன், அங்கு வெய் ஃபெங்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு அரசுமுறை அல்லாத பயணமாக சீனா சென்று அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே மேற்கொள்ளும் இந்தப் பயணம், பாதுகாப்புத் துறையில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதையே பிரதானமாக கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெய் ஃபெங்கேவின் இந்தியப் பயணம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங் கூறுகையில், கடந்த சில காலமாக சீனா-இந்தியா இடையேயான உறவு, படிப்படியாக மேம்பட்டு வருகிறது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது' என்றார்.
இந்தச் சந்திப்பின்போது ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்தாகாது என்றும், இருதரப்பு ராணுவத்தின் இடையே உயர்நிலை அளவிலான பேச்சுவார்த்தை மேற்கொள்வதுதான் ஒரே இலக்கு என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.