காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஜெனீவா செல்ல சசி தரூருக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூருக்கு ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகருக்கு செல்ல தில்லி நீதிமன்றம்

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 1:07 am IST


சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூருக்கு ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகருக்கு செல்ல தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.
தில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சசி தரூர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சசி தரூர் ஜாமீனில் வெளியே உள்ளார்.
நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 8 நாடுகளுக்கு சசிதரூர் தற்போது சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். ஜெர்மனியில் தற்போது இருக்கும் சசி தரூர், அங்கிருந்து மறைந்த ஐ.நா. முன்னாள் பொது செயலாளர் கோஃபி அன்னானின் குடும்பத்தினர் தங்கியிருக்கும் ஜெனீவா நகருக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்.
இதையொட்டி, ஜெர்மனியில் இருந்து ஜெனீவா செல்ல அனுமதி கோரி தில்லி கூடுதல் தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சசி தரூர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தில்லி கூடுதல் தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சமர் விஷால் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சசி தரூர் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் விகாஷ் பாஹ்வா, கௌரவ் குப்தா ஆகியோர் ஆஜராகி வாதாடுகையில், ஐ.நா. சபையில் கோஃபி அன்னான் தலைமையில் சசி தரூர் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்; ஆதலால் கோஃபி அன்னான் குடும்பத்துக்கு சசி தரூர் ஆறுதல் தெரிவிக்க விரும்புகிறார். அதேபோல், ஐ.நா. மூலம் கேரள மழை வெள்ள பாதிப்புக்கு நிவாரண உதவி பெறவும் சசி தரூர் திட்டமிட்டுள்ளார். எனவே ஜெனீவாவுக்கு செல்ல சசி தரூருக்கு நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும். ஜெனீவாவுக்கு திங்கள்கிழமை மாலை பயணம் செல்லும் சசி தரூர், செவ்வாய்க்கிழமை (ஆக.21) திரும்பி விடுவார்' என்றனர்.
இதைக் கேட்டுவிட்டு நீதிபதி சமர் விஷால் கூறுகையில், சசி தரூரின் மனு ஏற்கப்படுகிறது. அவர் ஜெனீவா செல்ல அனுமதியளிக்கப்படுகிறது' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.