/

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்திக்கு தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி யின் பிறந்த நாளையொட்டி, தில்லி நாடாளுமன்றத்தில் அவரது உருவப் படத்திற்கு தலைவர்கள் திங்கள்கிழமை மலர் மரியாதை செய்தனர்.

News image

தில்லி நாடாளுமன்றத்தில் உள்ள ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்திய மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா

Updated On :30 ஜனவரி 2024, 10:03 pm IST


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி யின் பிறந்த நாளையொட்டி, தில்லி நாடாளுமன்றத்தில் அவரது உருவப் படத்திற்கு தலைவர்கள் திங்கள்கிழமை மலர் மரியாதை செய்தனர்.
நாடாளுமன்ற மைய அரங்கில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆளுயர திருவுருவப் படத்திற்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேஹ்வால், விஜய் கோயல், முன்னாள் துணைப் பிரதமரும், மக்களவை நெறிகள் குழுவின் தலைவருமான எல்.கே. அத்வானி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மக்களவையின் தலைமைச் செயலர் ஸ்னேஹலதா ஸ்ரீவாஸ்தவா மற்றும் நாடாளுமன்ற முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின்போது ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து மக்களவைச் செயலகத்தால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சிறுகையேடு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. 
நாடாளுமன்ற மைய அரங்கில் 1993ஆம் ஆண்டு, ஆகஸ்டு 20-ஆம் தேதி ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா திறந்து வைத்தது நினவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.