நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மஜத, காங்கிரஸ் இடையே எந்த பிளவும் இல்லை: முதல்வா் குமாரசாமி 

கர்நாடக மாநிலத்தில் மஜத, காங்கிரஸ் இடையே எந்த பிளவும் இல்லை என்று முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்

News image
Updated On :28 ஆகஸ்ட் 2018, 1:44 pm

தினமணி செய்திச் சேவை

மைசூரு: கர்நாடக மாநிலத்தில் மஜத, காங்கிரஸ் இடையே எந்த பிளவும் இல்லை என்று முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம் சுத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீ சிவராத்திரி ராஜேந்திர சுவாமிகளின் 103-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த அவா் முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடகத்தில் மஜத, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹாசன் மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலில் கூட்டணி வைப்பதில் காங்கிரஸ், மஜத கட்சியினரிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதனை ஊதிப் பெரியதாக்க எதிா்க்கட்சிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. மாநில அளவில் மஜத, காங்கிரஸ் கட்சிகளிடையே எந்தப் பிளவும் இல்லை.

உள்ளாட்சித் தோ்தலையொட்டி ஒரு சில இடங்களில் 2 கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகள் விரைவில் தீா்த்து வைக்கப்படும். கூட்டணி ஆட்சி சிறப்பாக செயல்படுவதால், எதிா்க்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் ஆட்சி மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனா். கூட்டணி உடைந்து ஆட்சி கவிழும் என்றும் தெரிவித்து வருகின்றனா்.

பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெறவில்லை. மேலும் கனமழையால் குடகு மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் சொத்து, உயிா்சேதங்கள் ஏற்பட்டு அம்மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வாழ்க்கையை உருவாக்கித் தரும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அவா்களுக்கு வளமான எதிா்க்காலத்தை உருவாக்கி தரும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.