ஜெய்பூர்: ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு,ஜெய்பூர் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த மாத இறுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அல்வர் என்னும் இடத்தில பேசும்போது, 'ஹனுமன் வனவாசி என்றும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்' என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு அப்போதே பலத்த கண்டணங்கள் எழுந்தன
இந்நிலையில் ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு, ஜெய்பூர் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜெய்பூரைச் சேர்ந்த சர்வ பிராமின் மகாசபா என்னும் அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா. ஜெய்பூர் கீழமை நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, அதில் பங்கேற்ற உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், அல்வார் என்னும் இடத்தில் பேசும்போது, 'ஹனுமன் வனவாசி என்றும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்' என்றும் கூறியிருந்தார் இதன்மூலம் அவர் ஹிந்துக்களின் மனதினை புண்படுத்தியிருக்கிறார்.
எனவே அவர் மீது இ.பி.கோ 295, 295 (அ) & 2998 ஆகிய பிரிவுகளின் வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும்,
இவ்வாறு அவரது மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது டிசம்பர் 11-ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
ஏற்கனவே யோகியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்கா விட்டால், அவரை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வ பிராமின் மகாசபா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


