
ஜெய்ப்பூர்: மூன்றாவது முறையாக ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றுக் கொண்டார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 100 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதன்படி, ராஜஸ்தான் மாநில முதல்வரா அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து மூன்றாவது முறையாக ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ராஜஸ்தான் மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.