
அருணாசலப் பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் 10 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதியில் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்கப்படவில்லை என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
வடகிழக்கு பிராந்தியத்தில் 5,182 கிமீ தொலைவு சர்வதேச எல்லையில் 10 கிமீ தொலைவுக்குள் இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை 1,511. இதில், வங்கதேச எல்லையையொட்டி 1,373 செல்லிடப்பேசி கோபுரங்களும், பூடான் எல்லையையொட்டி 48 கோபுரங்களும், மியான்மர் எல்லையையொட்டி 90 கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அருணாசலப் பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் 10 கிமீ தொலைவுக்கு உள்பட்ட பகுதியில் செல்லிடப்பேசி கோபுரங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. வடகிழக்கு பிராந்தியத்தின் செல்லிடப்பேசி தொடர்புகள் போதிய அளவில் இல்லை. அருணாசலப் பிரதேசத்தில் 4,119 கிராமங்கள், அஸ்ஸாமில் 2 மாவட்டங்களில் மொத்தம் 2, 817 செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்கும் பணி, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




