உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புந்தேல்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் பகுதிகளுக்கு வளர்ச்சி வாரியங்கள் அமைக்க அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வாரியங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அல்லது அவர் நியமனம் செய்யும் ஒருவர் தலைமை வகிப்பார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரித்து, புந்தேல்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் பகுதிகளை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்த நிலையில், அவ்வாறு செய்ய முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், லக்னௌவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் வளர்ச்சி வாரியங்கள் அமைக்கவும், வர்த்தகர்கள் நல வாரியம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு மூத்த அமைச்சர் சித்தார்த்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புந்தேல்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் வளர்ச்சி வாரியங்கள் அமைக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வாரியத்தின் தலைவராக முதல்வர் அல்லது அவர் நியமனம் செய்பவர் பதவி வகிப்பார். 2 துணைத் தலைவர்களும், 2 நிபுணர்களும், 12 அரசு உறுப்பினர்களும், 11 அரசு சாரா உறுப்பினர்களும் வாரியத்தில் இடம் பெற்றிருப்பர். அவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
ஜிஎஸ்டி தொடர்பாக, வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சரிசெய்வதற்காக வர்த்தகர்கள் நல வாரியம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக முதல்வர் பதவி வகிப்பார். 3 துணைத் தலைவர்களும், 11 அரசு சாரா உறுப்பினர்களும் இதில் இடம் பெறுவர். இந்த வாரியத்தின் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும்.
பணியின்போது உயிரிழக்கும் போலீஸாரின் குடும்பத்தினருக்கு மட்டுமே இதுவரை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இனி, பணியின்போது பலத்தகாயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு செல்லும் போலீஸாருக்கும் ஓய்வூதியம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் ரூ. 2, 300 கோடி செலவில் மென்பொருள் நிறுவனம் அமைப்பதற்கு டாடா நிறுவனம் வாங்கவிருக்கும் இடத்துக்கு 25 சதவீதம் மானியம் வழங்குவதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார் சித்தார்த்நாத் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மான் வேட்டை கதை! காலா ஹிரன் படத்தை எதிர்த்து சல்மான் கான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
நியூசி. நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

புகழ்பெற்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்!

அடுத்த 2 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics


