புதிய ரூ.20 நோட்டை விரைவில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூடுதல் அம்சங்களுடன், புதிய ரூ.20 நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கிறது; கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 4.92 பில்லியன் எண்ணிக்கையில் ரூ.20 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்த எண்ணிக்கை, 2 மடங்கு அதிகரித்து, கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி, 10 பில்லியன் எண்ணிக்கையையும் தாண்டிவிட்டது. நாட்டில் புழக்கத்தில் இருக்கும் மொத்த ரூபாய் நோட்டுகளில் 9.8 சதவீதம் ரூ.20 நோட்டுகள்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால், ரூ.500, ரூ.1,000 ஆகிய பழைய ரூபாய் நோட்டுகள் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் விட்டது.
இதேபோல், புதிதாக ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.200 ஆகிய ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்தில் விட்டது. இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்திலும், மகாத்மா காந்தி உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது. முந்தைய ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடுகையில், புதிய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் அளவு, வடிவமைப்பு ஆகியவை வேறுபட்டது. அதே வரிசையில் தற்போது புதிதாக ரூ.20 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








