டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம்: நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

News image
Updated On :25 டிசம்பர் 2018, 1:25 pm IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க-வின் மூத்தத் தலைவருமான வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். இதையடுத்து அவருக்கு தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி தலம் பகுதியில் ரூ.10.51 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. சதைவ் தலம் என பெயரிடப்பட்டுள்ள அந்த நினைவிடம் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த தினத்தையொட்டி இன்று திறக்கப்பட்டது.

இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர்கள், வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதையும் செலுத்தினர்.

இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது.  முன்னதாக வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.