/

மேகாலயா சுரங்கத்துக்குள் நுழைய மீட்புப் படைக்கு 5 நாட்கள் ஆகும்

மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியா மலைப் பகுதியில் 15 தொழிலாளர்கள் சிக்கியிருக்கும்  380 அடி ஆழமுள்ள சுரங்கத்துக்குள் இன்னும் 5 நாட்களில் சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:31 pm IST


குவகாத்தி: மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியா மலைப் பகுதியில் 15 தொழிலாளர்கள் சிக்கியிருக்கும்  380 அடி ஆழமுள்ள சுரங்கத்துக்குள் இன்னும் 5 நாட்களில் சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேகாலயாவில் சுரங்க விபத்து நேரிட்டு இரண்டு வாரத்துக்கும் மேல் ஆன நிலையில், கடந்த வாரம் ஒடிசாவில் இருந்து சிறப்பு தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிக்காக விரைந்தனர்.

இவர்கள் கொண்டு சென்ற மிக அதிக அழுத்தம் கொண்ட பம்புகளைக் கொண்டு சுரங்க வாயிலை மூடியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வெள்ள நீரை வடித்து, சுரங்கத்துக்குள் நுழைய இன்னமும் 4 முதல் 5 நாட்கள் ஆகலாம் என்று சுரங்கத் தொழில் நிபுணர் ஜஸ்வந்த் சிங் கில்  தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வெள்ள மீட்புப் பணிகளுக்கு நீருக்குள் இருந்து வேலை செய்யும் பம்புகள்தான் தேவை. ஆனால் தற்போது வந்திருப்பவை அப்படிப்பட்டவை அல்ல. அதனால் வெள்ள நீருக்கு மேலே ஒரு திட்டு இன்றுதான் உருவாக்கப்பட உள்ளது. அது அமைக்கப்பட்டுவிட்டால் அதில் வைத்து பம்புகளை இயக்கி வெள்ள நீரை வெளியேற்றும் பணி நடக்கும். 

வெள்ளநீரை வெளியேற்றாமல், சுரங்கத்துக்குள் நுழைந்து தொழிலாளர்களையோ அல்லது அவர்களது உடலையோ மீட்கவே முடியாது. எனவே வெள்ள நீரை வடித்து எடுக்க இன்னமும் 4 முதல் 5 நாடகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல்வேறு படை வீரர்களைக் கொண்ட மீட்புக் குழு நடத்திய பல்வேறு முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.