பிரதமர் மோடியை கிண்டல் செய்து நடிகை ட்வீட்: பாஜகவினர் சீற்றம்! 

பிரதமர் மோடியின் பேச்சை கிண்டல் செய்து பிரபல நடிகையும் காங்கிரஸ் உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா  இட்ட ட்வீட் பாஜகவினரை சீற்றம் கொள்ள வைத்துள்ளது.
பிரதமர் மோடியை கிண்டல் செய்து நடிகை ட்வீட்: பாஜகவினர் சீற்றம்! 
Updated on
1 min read

பெங்களூரு: பிரதமர் மோடியின் பேச்சை கிண்டல் செய்து பிரபல நடிகையும் காங்கிரஸ் உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா  இட்ட ட்வீட் பாஜகவினரை சீற்றம் கொள்ள வைத்துள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறுவதற்கான  வாய்ப்புகள் உள்ளது. இதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இப்பொழுதே தேர்தல் பணிகளைத் துவக்கி விட்டன. அதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று பிரதமர் மோடி கர்நாடகாவில் பாஜக சார்பில் நடைபெற்ற 'பரிவர்தன் பேரணியில்' பங்கேற்றுப் பேசினார்.

அப்போது மோடி ''கர்நாடகவைப் பொறுத்த வரை  எப்போதும் பழங்கள், காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக தக்காளி, வெங்காயம், உருளை சாகுபடிக்கு முதலிடம் என்பதை அந்த காய்கறிகளின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்துக்களை வைத்து "டாப்" என்று குறிப்பிட்டுப் பேசினார்.

இதனை கிண்டல் செய்து நடிகை திவ்யா ஸ்பந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில், ''போதையில் இருக்கும் போது பேசினால் இப்படித்தான் நடக்கும்'' என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் 'டாப்' என்ற வார்த்தையை அப்படியே திருப்பி  'போட்' என்று குறிப்பிட்டிருந்தார்.   'போட்' என்றால் போதைப்பொருள் என்று பொருள் படும்

திவ்யாவின் இந்த கருத்து பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. பலரும் இதற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com