ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நீதிமன்றத்தை மீன் சந்தை போல மாற்ற வேண்டாம்: வழக்குரைஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.எச்.லோயா மர்ம மரண வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர்களுக்கு இடையே திங்கள்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நீதிமன்ற அறையை மீன் சந்தை போல

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 8:52 pm

DIN

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.எச்.லோயா மர்ம மரண வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர்களுக்கு இடையே திங்கள்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நீதிமன்ற அறையை மீன் சந்தை போல மாற்றிவிட வேண்டாம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.எச்.லோயா தனது உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி, நாகபுரிக்குச் சென்றிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாரப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. நீதிபதி பி.எச்.லோயா, சொராபுதீன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நீதிபதி லோயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுதொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரியும் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பந்துராஜ் சம்பாஜி, காங்கிரஸ் பிரமுகர் தெஹ்சீன் பூனாவாலா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பல்லவ சிசோடியாவும், மும்பை வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் துஷ்யந்த் தவேவும் ஆஜரானார்கள். அப்போது, பல்லவ சிசோடியாவைப் பார்த்து, ''இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரித்தபோது, அமித் ஷா சார்பிலும், இப்போது மனுதாரர் சார்பிலும் வாதாடுகிறீர்களே!'' என்று துஷ்யந்த் தவே ஏளனமாகக் கூறினார். அதைத் தொடர்ந்து இருவரும் கடுமையான சொற்களால் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டனர்.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், 'முதலில் நாங்கள் சொல்வதை கவனியுங்கள்; நீதிமன்ற அறையை மீன் சந்தைபோல மாற்ற வேண்டாம்' துஷ்யந்த் தவேவை எச்சரித்தனர். 
அதற்கு மறுப்பு தெரிவித்த தவே, ''முதலில் பல்லவ சிசோடியாவையும், மகாராஷ்டிர அரசு வழக்குரைஞர் ஹரீஷ் சால்வேவையும் தடுத்து நிறுத்துங்கள்; மனசாட்சிப்படி பேசுங்கள்'' என்றார். 
அப்போது, ''மனசாட்சி பற்றி எங்களுக்குப் பாடம் புகட்ட வேண்டாம்'' என்று துஷ்யந்த் தவேவை நீதிபதி கான்வில்கர் எச்சரித்தார். அதைத் தொடர்ந்து, நீதின்ற விசாரணையின்போது கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் என்று நீதிபதி சந்திரசூடும் அறிவுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, 'என்னைப் போன்ற வழக்குரைஞர்கள் குரல் எழுப்புவதை முடக்குவதற்காக, இந்திய பார் கவுன்சில் மூலம் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே அமித் ஷா சார்பில் ஆஜரான பல்லவ சிசோடியா, இந்த வழக்கிலும் ஆஜராகத் தடை விதிக்க வேண்டும்' என்று தவே கூறினார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
வழக்குரைஞர்கள் துஷ்யந்த் தவே, பல்லவ சிசோடியா ஆகியோரின் செயல்கள் மன்னிக்க முடியாதவை. அவர்கள் மீன் சந்தையில் சண்டை போடுவது போல் வாக்குவாதம் செய்துள்ளனர். இது வழக்குரைஞர் பணிக்கு உகந்தது அல்ல என்று கூறினர்.
அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய மனு: இதனிடையே, நீதிபதி பி.எச்.லோயா மர்ம மரணம் தொடர்பாக, 2 நீதிபதி உள்பட 11 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தக் கோரி, மும்பை வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.