பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்த தகவல்கள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
கர்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை பாஜக உறுப்பினர் சித்தலிங்கப்பா சங்கனூரின் கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது: இலக்கியவாதி கல்புர்கி, பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கல்புர்கி கொலையில் குற்றவாளிகள் குறித்து எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. ஆனால், கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அவர்களது விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்.
ரெளடிகளின் அத்துமீறலைத் தடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. 2017-இல் மாநிலத்தில் 63 கொலை சம்பவங்கள், 185 பாலியல் பலாத்கார சம்பவங்களும், 1,882 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மாநில அளவில் காவல் நிலையங்களில் மாதத்தின் 2-ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் தலித் சமுதாய மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளைத் தீர்க்கும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தலித் சமுதாய மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.