புதுதில்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை தில்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் வியாழனன்று தில்லி திரும்பினார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெள்ளியன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார்.
இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து பேசினார். அப்போது சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து ராகுலிடம் அவர் விசாரித்தாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் பலி!

துளிர்த்த தூண்டிலும் இளையராஜாவின் பிரளய இசையும்!

திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்! தவெக அமைச்சரவையில் மற்ற கட்சிகள்! வைகோ குற்றச்சாட்டு

5 ரூபாய் மருத்துவராக நடிக்கும் சூர்யா?
விடியோக்கள்

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK



