ஜெய்ப்பூர்: நியூட்டனுக்கு முன்பாக புவியீர்ப்பு விசையினை கண்டுபிடித்தது இந்தியாவின் பிரம்மகுப்தா என்று ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி திங்களன்று ராஜஸ்தான் பல்கலைகழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்பொழுது அவர் பேசியதாவது:
புவியீர்ப்பு விசையினை கண்டுபிடித்தது சர் ஐசக் நியூட்டன் என்று நாம் எல்லோரும் படித்திருக்கிறோம். ஆனால் ஆழமாகப் பார்த்தோமானால் நியூட்டனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் பிரம்மகுப்தா (இரண்டாம்) புவியீர்ப்பு விசை பற்றிய கொள்கையினை வெளியிட்டுள்ளார். நான் ஏன் இதனை நமது பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசுதேவ் தேவ்னானி ஒன்றும் சர்ச்சைகளுக்கு புதியவர் அல்ல. கடந்த ஆண்டு இவர் உலகிலேயே பசு ஒன்றுதான் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்து, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


