பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்திய ராணுவம் பதிலடி: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவி செய்து வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :15 ஜனவரி 2018, 7:37 am


பூஞ்ச்: இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவி செய்து வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது.

இது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இந்திய எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி வருகிறது. அந்நாட்டுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக இந்திய ராணுவம் இன்று தாக்குதலை நடத்தியது.

பாகிஸ்தானின் எதிர் தாக்குதலை எதிர்கொள்ள எந்த நேரத்திலும் இந்திய ராணுவம் தயார் நிலையிலேயே உள்ளது. பாகிஸ்தானில் அத்துமீறல் தொடர்ந்தால் இந்திய ராணுவம் அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.