பாட்னா: மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான மூன்றாவது வழக்கிலும் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
பிகார் மாநில முதல்வராக 1990 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்பொழுது கால்நடைத் தீவனம் வாங்கியதில் பெருமளவு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் லாலு மீது சிபிஐ 5 வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது தொடர்பான முதல் வழக்கில் 2013-ஆம் ஆண்டு லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட லாலு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்றார்.
இரண்டாவது வழக்கில் தியோகர் மாவட்ட அரசு கஜானாவில் இருந்து சட்டவிரோதமாக ரூ.89.27 லட்சம் பரிமாற்றம் செய்த வழக்கில், லாலு, மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். லாலு, 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசா அரசு கருவூலத்தில் இருந்து 33.67 கோடி ரூபாய் முறைகேடான பணப் பரிமாற்றம் செய்ததாக லாலு உட்பட 76 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 14 பேர் இறந்து விட்டனர். மூன்று பேர் அப்ரூவராக மாறினர். ஒருவர் இன்னமும் தலைமறைவாக உள்ளார். இவர்களை தவிர 56 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் புதனன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கபபடலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


