சென்னை: குடியரசு தினத்தினை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகைகளை 'குடியரசு தினப் பரிசாக' அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு சேவைத்துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு இதர மொபைல் போன் சேவை நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதற்காக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன.
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியது. இதற்கு போட்டியாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் குடியரசு தினத்தினை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை 'குடியரசு தினப் பரிசாக' அறிவித்துள்ளது.
அதன்படி பல்வேறு திட்டங்களில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்சமயம் 1.5 ஜிபி டேட்டாவும், தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட திட்டங்களில் தற்சமயம் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 149 திட்டம், 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 349 திட்டம், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 399 திட்டம் மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 449 திட்டம் ஆகியவற்றின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் தினசரி ஒரு ஜிபி டேட்டாவுக்குப் பதில் இனி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும்
அதுபோலேவே 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 198 திட்டம், 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 398 திட்டம், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 348 திட்டம், 91 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 498 திட்டம் ஆகியவற்றின் கீழ் தற்போது வழங்கப்படும் 1.5 ஜிபி டேட்டாவுக்கு பதில் இனி 2ஜி டேட்டா வழங்கப்படும்.
இவற்றுடன் ரூ.98 மதிப்புள்ள புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகைகள் எல்லாம் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


