திருப்பதி: உலகப் புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் மின்னணு சாதனங்களுடன் மர்மப் பை ஒன்று கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.
இது தொடர்பாக செம்மரக்க கடத்தல் தடுப்பு பிரிவுக்கான காவல்துறைத் தலைவர் காந்த ராவ் திங்கள் அன்று இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்மேன், அலைபேசி, கம்ப்யூட்டரின் 'மதர்போர்ட்' ஒன்று, 'கண்டக்டர்'எனப்படும் மின்கடத்திகள், மின்சார ஒயர்கள் மற்றும் 'கெப்பாசிட்டர்' எனப்படும் மின் தேக்கிகள் ஆகியவை அடங்கிய பிளாஸ்டிக் பை ஒன்று. திங்கள் அன்று இரவு இங்குள்ள ஸ்ரீ வரிமேட்டு மலைப்பாதையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த பாதையானது திருப்பதி மலைக்கோயிலுக்கு செல்லும் முக்கியமான பாதைகளில் ஒன்றாகும். அப்பகுதியில் காவல்துறை ஆய்வாளர் வாசு தலைமையிலான அணியினர் வழக்கமான ரோந்துப் பணிகள் முடிந்து திரும்பும் பொழுது இதனைக் கண்டெடுத்துள்ளனர்.
யார் இதனை அங்கு விட்டுச் சென்றுள்ளனர்? எதற்காக அங்கே அது விட்டுச் செல்லப்பட்டது? ஆகிய விபரங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


