ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது: சோனியா

மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2018, 8:19 am

மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் புது தில்லியில் அக்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உட்பட கட்சியினர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் சோனியா பேசியதாவது:

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் ராகுலுக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்து வருபவர்களிடம் இருந்து நாம் மக்களை மீட்க வேண்டும்.

சமீபகாலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு மற்றும் நடவடிக்கை மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நாட்டின் ஏழைகளுக்கு இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையற்ற மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுவதை காட்டுகிறது. 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகார மற்றும் பணபலத்தை எதிர்க்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே அணியாக ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஒவ்வொருவரும் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்தால் மட்டுமே முடியும் என்று கூறியதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜீவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.