காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) துணைத் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியின் உறவினரான சர்தாஜ் மத்னி திடீரென அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பிடிபி கட்சியில் மெஹபூபா முஃப்தியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இம்ரான் அன்சாரி உட்பட பல எம்.எல்.ஏ-க்கள் 3 வாரங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் பிடிபி துணைத் தலைவர் பதவியில் இருந்து சர்தாஜ் மத்னி விலகியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், எனது ராஜிநாமா கடிதத்தை மெஹபூபா முஃப்தியிடம் (பிடிபி கட்சித் தலைவர்) சமர்ப்பித்து விட்டேன். கட்சியின் நலன் கருதியும், கட்சியின் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மைக்காகவும் இந்த முடிவை எடுத்தேன்' என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் பிடிபி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில், பிடிபி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனிடையே, பிடிபி கட்சியைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள், 2 எம்எல்சிக்கள், கட்சியில் உறவினர்களுக்கு மெஹபூபா முஃப்தி முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்து, அவருக்கு எதிராக வெளிப்படையாக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் பிடிபி கட்சியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த குழப்பத்துக்கு முடிவு கட்டும் வகையிலேயே, துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளீர்களா? என்று மத்னியிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

ரிஷப ராசிக்கு மனநிறைவு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 09)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 9 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு எப்படி?

செபி-யிடம் 400 ஜிபி ஆவணங்கள் சமா்ப்பிப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



