பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிகாரப்பூர்வ இணையதளம், சுட்டுரைப் பக்கம், முகநூல் பக்கம் போன்றவை இல்லை என அக்கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட்சியின் அனைத்து நிர்வாகக் குழுக்களிலும், ஏறக்குறைய 50 சதவிகிதம் பேர் இளைஞர்களே உள்ளனர். எனவே கட்சிக்கு எனத் தனியாக இளைஞர் அணி எதுவும் அமைக்கப்படவில்லை. இது போன்று, பெண்கள், மாணவர்கள் ஆகியோருக்கும் தனியாக அணிகள் எதுவும் கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அமைக்கப்படவில்லை.
கட்சிக்கு அதிகாரப்பூர்வ இணையதளம், சுட்டுரைப் பக்கம், முகநூல் பக்கம் போன்றவை உருவாக்கப்படவில்லை. கட்சியின் பெயரில் இயங்கி வரும் இது போன்ற இணையப் பக்கங்கள் அனைத்தும் கட்சியினால் அங்கீகரிக்கப்படாதவை.
மேலும், கட்சியின் சார்பாகக் கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம், கட்சியின் மூத்த தலைவர் சுதீந்திர பதோரியாவிற்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளதாகவும், வேறு யாருக்கும் அத்தகைய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவசிஸ் ஜராரியா என்ற இளைஞர், பகுஜன் சமாஜ் கட்சியின் பெயரில் போலியாக இணையதளம் ஒன்றை நடத்தி, சில தனியார் தொலைக்காட்சிகளின் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, உறுப்பினர் சேர்க்கைக்குக் கட்டணம் வசூலித்ததாகப் புகார் எழுந்ததையடுத்து, மாயாவதி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.37 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: காலக்கெடு நிா்ணயிக்க ஆசிரியா்கள் வலியுறுத்தல்

நாட்டில் டிராக்டா் விற்பனை விறுவிறுப்பு

கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு வேதாந்தா ரூ.62,722 கோடி பங்களிப்பு!






