எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் தொகுதிப் பங்கீடு செய்வது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர்

News image
Updated On :5 ஜூன் 2018, 7:26 pm

DIN

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் தொகுதிப் பங்கீடு செய்வது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம்தான் மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? என்பதை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இங்கு பாஜகவுக்கு எதிராக சமாஜவாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல்களில் பாஜகவை தோற்கடித்த உற்சாகத்தில் இந்த இரு கட்சிகளும் மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி பாதியளவு தொகுதிகளை அதாவது 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சியிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த சமாஜவாதி தலைவர் அகிலேஷ் இது தொடர்பாக கூறியதாவது:
தொகுதிப் பங்கீடு குறித்து இப்போது நாங்கள் எதையும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். தேர்தலுக்கு முன்பாக தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். பேச்சுவார்த்தைக்குப் பிறகே யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்படும்.
தொகுதிப் பங்கீடு குறித்து ஊடகங்கள்தான் இப்போதே செய்தி வெளியிட்டு வருகின்றன. நாங்கள் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. சமாஜவாதி கட்சிக்கு பெரிய மனது உண்டு. அது தொகுதிப் பங்கீட்டில் தெரியவரும்.
மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சமாஜவாதி கட்சி போட்டியிடும். சண்டீகர், ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலில் போட்டியிடவும் தயாராகி வருகிறோம்.
உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதிருந்தே தயாராகி வருகிறோம். வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று தொகுதி வாரியாக ஆய்வு செய்து வருகிறோம். பாஜக மீது மக்கள் எந்த அளவுக்கு கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை இடைத்தேர்தல் முடிவுகளில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். முக்கியப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.