மிஸோரமில் சாலை விபத்து: 11 பேர் பலி

மிஸோரமில் மாநிலம், லுங்லி மாவட்டத்தில் உள்ள பங்ஸால் என்ற கிராமம் அருகே பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், பயணிகள் 11 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
Updated on
1 min read

மிஸோரமில் மாநிலம், லுங்லி மாவட்டத்தில் உள்ள பங்ஸால் என்ற கிராமம் அருகே பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், பயணிகள் 11 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தனியார் பேருந்து ஒன்று அய்ஸ்வால் நகரில் இருந்து சியாஹா மாவட்டத்துக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி: இதனிடையே, மிஸோரமில் மாநிலம், லுங்லி நகரில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: லுங்லான் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அப்போது, அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
லுங்லி மாவட்ட பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com