இந்தியாவிலேயே அதிகமாக விமானங்களைக் கையாண்டு மும்பை சர்வதேச விமான நிலையம் சாதனைப் படைத்துள்ளது. ஒற்றை ஓடுபாதை கொண்ட மும்பை விமான நிலையமே உலகின் மிக பரபரப்பாக இயங்கும் விமான நிலையமாக மாறியுள்ளது.
இங்கு சராசரியாக 65 விநாடிகளுக்கு ஒரு விமானம் என்ற வகையில் தினமும் 837 விமானங்களை கையாண்டு வருகிறது. இதில், மணிக்கு சராசரியாக 48 விமானங்களையும், மிகவும் பரபரப்பான கால கட்டங்களில் அதிகபட்சம் 52 விமானங்களையும் கையாண்டு வருகிறது.
பயணிகளைக் கையாளும் எண்ணிக்கையிலும் மும்பை விமான நிலையமே முதலிடத்தில் உள்ளது. சென்ற நிதி ஆண்டில் மட்டும் அந்த விமான நிலையம் 4.52 கோடி விமானப் பயணிகளைக் கையாண்டது.
இங்கு கடந்தாண்டு டிசம்பர் 6-ஆம் தேதி 24 மணி நேரத்தில் 974 விமானங்களை கையாண்டு சாதனை படைத்தது. அதுபோல ஜனவரி 20-ஆம் தேதி 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு, தனது முந்தைய சாதனையை முறியடித்தது.
இந்நிலையில், மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஜுன் 5-ஆம் தேதி 1,003 விமானங்களைக் கையாண்டு புது சாதனைப் படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆயிரம் விமானங்களை கடந்தது இதுவே முதன்முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


