ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அப்போது, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வூஹானில் மோடி-ஜின்பிங் மேற்கொண்ட அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மோடி-ஜின்பிங் சந்திப்பு வரும் 9-ஆம் தேதி நிகழவுள்ளது.
இதனிடையே, எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க வரும் இதர நாடுகளில், சுமார் 6 நாடுகளின் தலைவர்களோடு மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அந்த முடிவு குறித்து இறுதி செய்யப்பட வேண்டியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறினார்.
இந்நிலையில், அந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைனுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவாரா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
எஸ்சிஓ மாநாட்டில் முழு உறுப்பினர்கள் அந்தஸ்துடன் இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் முறையாகப் பங்கேற்கவுள்ள நிலையில், உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு விவகாரம் குறித்து மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என்று ரவீஷ் குமார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








