/

பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் நிதியமைச்சர் இன்று ஆலோசனை

மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மும்பையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Updated On :30 ஜனவரி 2024, 6:45 pm IST

மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மும்பையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த இருக்கிறார்.
பாரத ஸ்டேட் வங்கி இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சந்திப்பில் நாட்டின் மேற்கு, தெற்கு பகுதியைச் சேர்ந்த பொதுத் துறை வங்கித் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். மொத்தம் 15 வங்கிகளைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் இந்தியப் பொதுத் துறை வங்கிகள் பல கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இந்த சூழ்நிலையில், நடைபெறவுள்ள இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வாராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு வங்கியும் என்ன திட்டங்கள் வைத்துள்ளன என்பது குறித்து நிதியமைச்சரிடம் விளக்கமளிக்கப்படும் என்று தெரிகிறது. வாராக்கடன் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க காலக்கெடுவுடன் கூடிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று ஏற்கெனவே வங்கிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.