ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் கேஜ்ரிவால் அறிவுரை

பிரதமர் மோடி நேர்மறையான அரசியல் செய்தால் மக்கள் பாராட்டுவார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஜூன் 2018, 8:09 am

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடி குறித்து கூறுகையில்,

"சிபிஐ எங்களது அதிகாரிகளை அழைத்துச் சென்று தவறாக நடத்துகின்றனர். விசாரணைக்காக அழைத்துச் சென்று நீண்ட நேரம் உட்கார வைக்கிறார்கள். இதனை, சிபிஐ மோடி மற்றும் அமித்ஷாவிடம் தெரிவிக்கின்றனர். 

இதற்கு முன்னாள் போடப்பட்ட வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளாமல் புதிய வழக்குகளுக்கு இழுத்து வருகிறார்கள். ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ வசம் மட்டுமே இதுவரை 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளின் நிலைமை குறித்து தெரியவேண்டும்.  

எனது வீடு மற்றும் எனது அமைச்சர்களின் வீட்டில் சோதனை நடத்துகின்றனர். ஆனால், அவர்களால் எங்களை கைது செய்யமுடியவில்லை. ஏனென்றால் நாங்கள் நேர்மையானவர்கள் என்று தெரியும். இது எங்கள் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காகவே செயல்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய குறிக்கோளே எங்களது வேலையை நிறுத்துவது தான். 

பிரதமர் என்பவர் தேசத்தின் தந்தை போன்றவர். அவர் மக்களை பாதுகாக்க வேண்டும். அதைவிட்டு இடையூறு கொடுக்கக் கூடாது. நாங்கள் தில்லியில் 1,000 மோஹல்லா கிளினிக்கை தொடங்கினால், அவர் நாடு முழுவதும் 10,000 கிளினிக்கை தொடங்கவேண்டும். மக்கள் அப்போது தான் மகிழ்ச்சியடைந்து அவரை பாராட்டுவார்கள்" என்றார்.

மோஹல்லா கிளினிக் என்பது இலவச மருத்துவம் வழங்கப்படும் திட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.