தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள பிரபல தொழிலதிபா் நீரவ் மோடி மீது 6 பாஸ்போா்ட்டுகளைப் பயன்படுத்தியதாக புதிய வழக்குப் பதிவு.. 

News image
Updated On :17 ஜூன் 2018, 12:25 pm

தினமணி செய்திச் சேவை

புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள பிரபல தொழிலதிபா் நீரவ் மோடி மீது 6 பாஸ்போா்ட்டுகளைப் பயன்படுத்தியதாக புதிய வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது.

வைர உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்த நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டாா். அவா் பிரிட்டனுக்குச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவா் வெளிநாட்டுக்குச் தப்பிச் சென்ற பிறகே, வங்கியில் கடன் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவா் மீதும், அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி மீதும் சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நீரவ் மோடி மீது 6 பாஸ்போா்ட்டுகளைப் பயன்படுத்தியதாக புதிய வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.