ராகுல் காந்தி பிறந்தநாள்: மோடி வாழ்த்து, தொண்டர்கள் கொண்டாட்டம்
ராகுல் காந்தியின் 48-ஆவது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்கிழமை) 48-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் தொண்டர்கள் இந்த பிறந்தநாளை கோலாகலமாக திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, இன்று காலை தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இசைக் கருவிகளுடன் கூடி கொண்டாடினர்.



இதற்கிடையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
"ராகுல் காந்திக்கு பிறந்தாள் வாழ்த்துகள். அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன்" என்றார்.
ராகுல் காந்தியின் 48-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சத்தியமூர்த்தி பவனில் 48 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடவுள்ளனர். மேலும், இரத்த தான முகாமும் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...